ராகாவா லாரன்ஸ் புதிதாக நடிக்கும் படம் மொட்டை சிவா கெட்ட சிவா மற்றும் நாகா. இதில் ஒரு படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார்.
இப்படத்தின் தொடக்க விழாவை டிடி தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஏழை மாணவர்களுக்கு லாரன்ஸ் ரூ 1 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
இது 100 இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் படிப்பு செலவிற்கு தருவதாக கூறினார். உடனே டிடியும் தானும் அந்த ரூ 1 லட்சத்தை பெற்று கொள்வதாக கூற, அதற்கு சம்மதித்தார்.
பின் டிடியின் நற்பண்புகள் எனக்கு தெரியும், அவரை நம்பி பணத்தை தரலாம், என்றார். அதற்கு டிடி ‘அந்த பணத்தில் ஒவ்வொரு பைசாவிற்கும் நான் கணக்கு தருகிறேன்’ என கலகலப்பாக கூறினார்.
0 comments:
Post a Comment