திரைக்கு வந்து சில மாதங்களே ஆன, சில வாரங்களே ஆன சில திரைப்படங்கள் உங்கள் வீட்டு வரவேற்பறை தேடி சீக்கிரமே வர உள்ளன.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தம் புதிய திரைப்படங்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜெயா டிவியில் விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ திரைப்படமும், ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்த ‘லிங்கா’ படமும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
விஜய் டிவியில் தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
சன் டிவியில் ‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகப் போகிறது.
0 comments:
Post a Comment