மலையாளத்தில் ஹிட் அடித்த படங்களை தமிழில் ரீமேக் செய்வது சமீபத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.
சான்றாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மஞ்சுவாரியார் நடித்து மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்தப் படம் “ஹவ் ஓல்டு ஆர் யூ”. அதேபோல மீண்டும் நடிக்கக் களம் இறங்கிய ஜோதிகா அந்தப்படத்தை ரீமேக் செய்து 36 வயதினிலே என்ற பெயரில் நடித்து வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் ஹிட் அடித்த த்ரிஷ்யம் படம், தமிழில் ரீமேக்கில் கமல் நடிக்க பாபநாசமாக மாறியது. வசூல் ரீதியிலும், பெரிதும் பேசப்பட்ட படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது துல்கர்சல்மான், பகத் ஃபாசில், நஸ்ரியா, நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெற்றி பெற்ற மற்றுமொரு படம் தான் பெங்களூர் டேஸ். அந்தப் படத்தை தமிழில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள், ஷூட்டிங் நடந்துவருகிறது. ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர்.
இதேபோல சமீபத்தில், முழுக்க முழுக்க காதலும் காதல் சார்ந்த படமாக மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் பிரேமம். நேரம் படத்தை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரனின் அடுத்த படம் அது. வசூல் சாதனை படைத்த இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய தமிழ்த் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுவருகின்றனர்.
ஸ்டூடியோ க்ரீன் கே.இ.ஞானவேல்ராஜா மற்றும் தனுஷின் ஒண்டர் பார் நிறுவனமும் தமிழ் ரீமேக் உரிமையில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மூன்று பருவங்களில் முன்று முறை காதலிப்பது போன்ற கதை என்பதால் சூர்யா அல்லது புதுமுக நடிகர்களை வைத்து நடிக்க வைக்க ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் முயன்றுவருவதாக சொல்லப்படுகிறது.
அதுபோலவே தனுஷூம் தான் நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் ஒண்டர்பார் நிறுவனத்திற்காக அல்ஃபோன்ஸ் புத்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகச் சொல்லப்படுகிறது.
ஏன் இந்தப் போட்டி என்று கேட்டால், மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் என்பதாலும், தமிழில் ரீமேக் செய்தால் நிச்சயம் வசூல் ரீதியில் தயாரிப்பாளருக்கும் எந்த இழப்பும் ஏற்படாது என்பதால் அனைத்து தயாரிப்பாளர்களுமே ரீமேக் படங்களின் மீது அதிக கவனமும் ஆர்வமும் காட்டிவருகிறார்கள்.

Playtech Casinos Near DC (December 2021) - Mapyro
ReplyDelete› casinos › mapyro › 서산 출장마사지 casinos › 하남 출장마사지 mapyro Casino & Hotel – Washington State: 2021. Address: 3600 S. 여주 출장샵 Wilkes-Barre Parkway, D.C. Location: 고양 출장안마 Near Washington 전라북도 출장안마 State and is near the Ohio River.