தல அஜித்தின் 56வது படம் எப்போது வெளியாகும், எப்போதும் பார்ப்போம் என பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அஜித் நடிக்க சிவா இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற்று வருவதாகவும், இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.அதோடு படம் 65 % முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க, லட்சுமி மேனன் அஜித்தின் தங்கையாக நடிக்கும் இப்படத்தில் அனிருத் இசையமைத்து வருகிறார்.
தற்போது இப்படம் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment