இந்திய திரையுலகினரால் தற்போது பாராட்டப்பட்டு வருபவர் ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். இவர் அண்மையில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் சாதனை படைத்துவரும் பாகுபலி மற்றும் பஸ்ரங்கி பைஜான் போன்ற இரண்டு படங்களுக்கும் கதை எழுதியுள்ளார்.
சமீபத்தில், இவர் ரஜினியை சந்தித்து ஒரு புதிய கதை கூறியதாகவும், கதையை கேட்ட ரஜினி ஓகே சொல்லியுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதோடு ரஜினியின் இப்படத்தை விஜயேந்திர பிரசாத்தே இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரஜினி ரஞ்சித் படத்தை முடித்துவிட்டு, ஷங்கரின் ரோபோ 2வையும் முடித்து, இந்த படத்தில் இணைவார் என்று தெரிகிறது.
ரஜினியை இயக்கப்போகும் பிரபல எழுத்தாளர்? - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top