தன்னுடைய கணவருக்கு அழகான பெண்களின் பாதுகாப்பு பற்றி மட்டும் தான் கவலை இருக்கிறது...என் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை என்று டெல்லி முன்னாள் அமைச்சர் சோம்நாத் பார்தியை அவரது மனைவி லிபிகா மித்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். 

அரசியலில் சர்ச்சை நாயகனான சோம்நாத், டெல்லி சட்டசபையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைப்பது தொடர்பான ஆலோசனையின் போது, டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் கொடுத்து காவல் துறை எங்கள் கட்டுப்பாட்டில் இயங்கினால், அழகான பெண்கள் நள்ளிரவிலும் கூட அச்சமில்லாமல் வெளியில் செல்லும் வகையில் முழு பாதுகாப்பை வழங்குவோம் என்று கூறியிருந்தார். பெண்கள் குறித்த அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், சோம்நாத் "அழகான பெண்கள்" என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி அவரின் மனைவி லிபிகா கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் சற்று சுமாரான, அழகு குறைந்த பெண் என்பதால்தான் என் கணவர் என்னை மனதளவில் காயப்படுத்தியுள்ளார். அவருக்கு அழகிய பெண்களின் பாதுகாப்பு பற்றி மட்டும்தான் கவலை. என்னைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது என தெரிவித்துள்ளார்.

இதே சோம்நாத் பார்தி, நாயை ஏவி கடிக்கவிட்டு தம்மை சித்ரவதை செய்ததாக லிபிகா முன்னர் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
Top