தமிழுக்கு வரும் டோலிவுட் நடிகை ரேஷ்மா
தேசிய விருது வென்றவரும், காமெடி, குணசித்ர வேடங்களிலும் நடித்து வருபவர் தம்பி ராமையா. இவரது மகன் உமாபதி. இன்ஜினியரிங் படித்தவர். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இதுபற்றி அவர் கூறியது:நான் நடிக்க வருவதில் என் தந்தைக்கு முதலில் இஷ்டமில்லை. யாரிடமும் நடிக்கவும் சிபாரிசு செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார். அவரது பெயரை பயன்படுத்தாமல் நண்பர் ஒருவர் சொன்ன தகவலை வைத்து அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் ஆடிஷனுக்கு சென்றேன். 

நடிப்பு, வசனம் என டெஸ்ட் வைத்தார் இயக்குனர். அதில் தேர்வானேன். என் தந்தையின் அளவுக்கு என்னால் நடிக்க முடியாது. ஆனால் நடிப்பில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார். படம் பற்றி இயக்குனர் இன்பசேகர் கூறும்போது,’எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக நாம் கணக்குபோட்டாலும் அந்த பிரச்னைக்கு இறைவன் வேறு ஒரு கணக்கு போட்டு வைத்திருப்பான். இதுதான் கதைக்கரு. முடிவில் ஒரு மெசேஜுடன் கிளைமாக்ஸ் முடியும் என்பதால் இந்த தலைப்பு வைத்தேன். எஸ்.ரமேஷ்குமார் தயாரிப்பு. வர்மா ஒளிப்பதிவு. டி.இமான் இசை. ரேஷ்மா ரத்தோர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்’ என்றார்.

0 comments:

Post a Comment

 
Top