இலங்கை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மலிங்கா, தனது வித்தியாசமான ஸ்டைலில் எதிரணியை மிரட்டக் கூடியவர்.
இலங்கை அணியில் மட்டுமல்லாமல் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் அனல் பறக்கும் ஆட்டத்தை வெளித்தினார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சச்சின், மும்பை அணியில் மலிங்காவுடன் விளையாடி அனுபவம் பற்றி பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், மலிங்கா வித்தியாசமான பந்துவீச்சாளர். அவர் பந்துவீச்சு முறை முற்றிலும் மாறுப்பட்டது.
உலகின் எந்த ஒரு பவுலரும் அப்படி வீசுவது இல்லை. அவர் ஒரு உண்மையான சாம்பியன். உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீரர்.
அவருடன் மும்பை அணியில் விளையாடியது சிறந்த அனுபவம். அவர் முழுமையான ஜென்டில்மேன்.
அவரது தலைமுடியை பார்க்க வேண்டாம். அவரது பந்துவீச்சு தன்மையை பாருங்கள் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment