ஆப்பிள் நிறுவனம் சிரி செயலியில் மிகப்பெரிய அப்டேட் வழங்க இருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி புதிய அப்டேட் மூலம் போன் அழைப்புகளை ஏற்பது, மற்றும் வாய்ஸ்மெயில்களை வார்த்தைகளாக மாற்ற முடியும் என கூறப்படுகின்றது.

மேலும் வாயஸ்மெயில்கள் பறிமாற்றம் செய்யப்படும் புதிய சேவை ஐக்ளவுட் வாய்ஸ்மெயில் என்று அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. ஒரு வேளை சிரி உங்களுக்காக அழைப்பை ஏற்கும் பட்சத்தில் நீங்கள் ஏன் அழைப்பை ஏற்க முடியவில்லை என்பது போன்ற தகவல்களையும் வழங்கும் என கூறப்படுகின்றது. 


இந்த சேவை ஐபோன் பயனாளிகளை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் கூகுளின் வாய்ஸ் சர்வீஸ் இந்த சேவை முன்னதாகவே வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் ஊழியர்கள் தற்சமயம் இந்த சேவையை அலுவலகங்களில் பயன்படுத்தி வருவதாக பிஸ்னஸ் இன்சைடர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top