செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் கான். இப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவனுடன் யுவன் ஷங்கர் ராஜா இணைந்துள்ளார்.
இப்படத்தில் ஜகபதிபாபு ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். இவர் நேற்று ஸ்ரீமந்தடு படத்தின் தமிழ் பதிப்பான செல்வந்தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
இதில் இவர் பேசுகையில் ‘குடி, புகைப்பழக்கம், கெட்ட குணம் என்று கெட்ட வழியில் சென்றதால் “ராணுவ” அதிகாரியான நான் வேலையிலிருந்து நீக்கப்படுகிறேன். இன்னொரு அதிகாரியான சிம்புவுக்கும் எனக்குமான போராட்டமே கான்’ என்று படத்தின் கதையை கூறிவிட்டார். அவர் தெரிந்து தான் இதை கூறினாரா? இல்லை ஒரு ஆர்வத்தில் கூறிவிட்டரா? என்று தெரியவில்லை.
0 comments:
Post a Comment