மும்பையில் நடந்த சர்வதேச ஜுவல்லரி வீக் பேஷன் பேரேடில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சேலை அணிந்து கலக்கலாக பங்கேற்றுள்ளார்.
டென்னிஸ் இரட்டையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையாக இருக்கும் சானியா, அண்மையில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.
இதைத் தொடர்ந்து அவரது பெயர் இந்திய விளையாட்டுத் துறையின் உயரிய விருதான 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச ஜுவல்லரி வீக் பேஷன் பேரேடில் பங்கேற்ற சானியா, இந்திய பாரம்பரிய உடையான சேலை அணிந்து, மேடையில் ஒய்யார நடையில் கலக்கினார்.
 

0 comments:

Post a Comment

 
Top