குடும்பப் பாங்கான சீரியல்களுக்கு பெயர் போனவர் இயக்குநர் திருமுருகன். தற்போது சன் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இவரது குலதெய்வம் சீரியல் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளுடன் களேபரமாக உள்ளது. 

திருமுருகன் என்ற பெயரை விட அவரை கோபி என்று சொன்னால் தான் மக்களுக்குப் புரியும். அந்த வகையில் தனது முந்தைய இரண்டு சீரியல்களிலும் கோபி என்ற பெயரில் மக்கள் மனதில் வாழ்ந்தவர் திருமுருகன். 

திருமுருகனின் மெட்டி ஒலி ஆகட்டும், நாதஸ்வரம் ஆகட்டும் மக்கள் மனதில் அதிக இடம் பிடித்தது. காரணம் கிராமம், அதில் வாழும் வெள்ளந்தியான மக்கள், ஆபாசமில்லாத காட்சிகள், முகம் சுளிக்க வைக்காத உடைகள், முக்கியமாக இயல்பான வசனங்கள் போன்றவை தான். Read more

0 comments:

Post a Comment

 
Top