சகுனி படத்தை இயக்கிய சங்கர்தயாள் இயக்கும் புதியபடம் வீரதீரசூரன். இந்தப்படத்துக்குக் கதை எழுதியிருப்பவர் இயக்குநர் சுசீந்திரன். விஷ்ணுவிஷால் கதாநாயகனாகவும், கேத்தரின்தெரசா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்தப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
இந்தப்படத்தின் கதை, சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான பாண்டியநாடு கதையை ஒத்திருக்கிறது என்று சொல்கிறார்கள். பாண்டியநாடு கதை மதுரை மாநகரில் நடப்பது போன்று இருக்கும். இந்தப்படத்தின் கதை வடசென்னையில் நடப்பது போல இருக்கிறதாம். 

இது ஒன்றுதான் பெரியமாற்றம் என்றும் மற்றபடி அந்தக்கதைக்கும் இந்தக்கதைக்கும், கதாநாயகன் பயந்தாங்கொள்ளியாக இருப்பது தொடங்கி நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்தக்கதை முதலில் சென்னையை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்பட்டதென்றும் பாண்டியநாடு படம் தொடங்குகிற நேரத்தில் மதுரையாக மாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. அ

டுத்து விஷ்ணுவிஷால் படத்துக்குக் கதை தேவைப்பட்ட போது இந்தக்கதையை சுசீந்திரன் கொடுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு படம் தயாராகும்போது இதுபோன்று பல கதைகள் உலவத்தான் செய்யும். வீரதீரசூரன் படம் வந்தால் எல்லாம் தெளிவாகிவிடும்.   

0 comments:

Post a Comment

 
Top