தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அந்த நடிகர் தற்போது அரசியலில் குதிக்கப் போகிறார், என்ற ஒரு பேச்சு தமிழ்த் திரையுலகில் அரசல்புரசலாக எழுந்துள்ளது.

மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்திருக்கும் அவர் ஏற்கனவே தனது ரசிகர் மன்றங்களின் மூலம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகம் வழங்குவது, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது போன்ற சில விஷயங்களை செய்து வருகிறார்.

தற்போது இவர் முழுமூச்சாக அரசியலில் இறங்க இருக்கிறாராம். சமீபத்தில் நடந்த பிரமாண்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தாடிக்கார இயக்குனருக்கு அதிகளவு முக்கியத்துவம் அளித்ததின் பின்னணி, இதுதான் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

அரசியலில் தான் இறங்கும் போது தனக்கு ஆதரவாக தாடிக்கார இயக்குநர் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான், அவரின் மகன் சம்பந்தப்பட்ட பிரச்சினையையும் தீர்த்து வைத்திருக்கிறாராம் தளபதி நடிகர். விரைவில் இவர்கள் இருவரின் கூட்டணி பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Top