புலி படத்தின் டிரைலர் பற்றி வெளிவந்த ரகசியம்..!
சிம்புதேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள புலி படத்தின் இறுதிகட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப், பிரபு, நந்திதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். செப்டம்பர் 17ம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பொதுவாக தமிழ் திரையுலகில் எப்போதுமே ஒரு படத்தின் இசை வெளியீடு அன்று தான் டிரைலர் வெளியீடும் இருக்கும். ஆனால் புலி படத்தின் இசை வெளியீடு அன்று டிரைலர் வெளியிடவில்லை இதுகுறித்து தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் கூறுகையில், ”புலி படத்தின் டிரைலர் இசை வெளியீடு அன்று புலி படத்தின் டிரைலர் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும், டிரைலர் வெளியீட்டின் தேதிக்கும், படத்தின் கதைக்கும் சம்மந்தம் இருக்கிறது. அது எந்த தேதி என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top