நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு 36 வயதினிலே மூலம் ரீஎண்ட்ரி கொடுத்த ஜோதிகாவிற்கு மெகா ஹிட் கொடுத்து கோலிவுட் அவருக்கு வரவேற்பு கொடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்து ஜோதிகாவின் படம் என்ன மாதிரியான கதை மற்றும் கேரக்டரில் இருக்கும் என எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. 
இந்நிலையில் லாரன்ஸ் தனது அடுத்த படத்திற்காக ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தான் இயக்கி நடிக்க இருக்கும் வித்யாசமான கதைக்களம் கொண்ட ‘நாகா’ படத்தில் தான் ஜோதிகாவை ஒரு முக்கிய ரோலில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம் ராகவா லாரன்ஸ் .
எனினும் சூர்யா முன்னணி ஹீரோயின்களுக்கு நிகராக ஜோதிகாவிற்கு சம்பளம் கொடுக்க உள்ளதாக 36 வயதினிலே படத்தின் சக்ஸஸ் மீட்டில் பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜோதிகா நடித்தால் அவர் கேட்கும் தொகையை கொடுத்தாக வேண்டும் என்பதே உண்மை. 

0 comments:

Post a Comment

 
Top