முன்னாள் பாகிஸ்தான் தலைவர் வாசிம் அக்ரம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கராச்சியில் நேஷனல் மைதானத்தில் இருந்து காரில் தன் வீட்டுக்கு வாசிம் அக்ரம் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்தக் கொலை முயற்சியில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக தப்பிவிட்டார். ஆனால் கொலை முயற்சிக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.
இது தொடர்பாக அவரது மேலாளராக உள்ள அர்சலான் கூறுகையில், வாசிம் அக்ரமே காரை ஓட்டியதாகவும், சிலர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்த அவர், பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
|

0 comments:
Post a Comment