ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் ரு. 500 கோடியை தாண்டி பிரம்மாண்ட வசூல் சாதனை பெற்று வருகிறது.
இப்படத்தை பார்த்த பலர் இப்படம் ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாகவும், கண்டிப்பாக இப்படத்திற்கு அடுத்த வருடம் ஆஸ்கர் விருது கிடைக்கும் என்று கூறிவருகின்றனர்.
இதனை பார்த்த ராஜமௌலி, நான் ஆஸ்கர் விருது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஒரு நல்ல படம் கொடுக்க நினைத்தேன் கொடுத்தேன் எனக் கூறியுள்ளார்.
ராஜமௌலியின் ஈகா ( நான் ஈ ) ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்ட காட்சியமைப்புகளும், வித்தியாசமாகவும் உள்ள இந்த பாகுபலி படத்திற்கு கண்டிப்பாக ஆஸ்கர் விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
ஆஸ்கர் விமர்சனத்திற்கு பதில் அளித்த ராஜமௌலி - Cineulagam

0 comments:

Post a Comment

 
Top