ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி வரும் டெல்லி, பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளின் பங்குகள் விற்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2008ல் தொடங்கப்பட்ட இந்தியன் பிரிமியர் கிரிக்கெட் டி20 தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா உட்பட 8 அணிகள் பங்கேற்றன.
இதில் புதிதாக கொச்சி, புனே அணிகள் சேர்க்கப்பட்டன. பின்னர் ஊதிய பிரச்சனை காரணமாக இந்த அணிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் ஊதிய சிக்கலில் சிக்க, 2012ல் இதன் பங்குகள் விற்கப்பட்டன.
இந்நிலையில் சூதாட்ட பிரச்சனையில் முன்னணி அணிகளான சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டெல்லி, பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகளின் பங்குகள் விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 3 அணிகளின் பங்குகள் விற்கப்படுவதால் அடுத்த வருடம் ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி தொடங்குமா என்பதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Top