இந்த சோகக்கதைக்கு கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி முடிவு கட்டும் என்று இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அந்நிய மண்ணில் தங்களுடைய சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சால் மிரட்டிய இந்திய அணி இலங்கையில் மட்டும் ஜொலித்ததில்லை.
இந்திய அணி இதுவரை 6 முறை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியுள்ளது. இதில் 1993ம் ஆண்டு மட்டுமே தொடரை கைப்பற்றியது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கையில் அப்போது முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ் ஆகியோர் இந்திய அணியை நிலைகுலையச் செய்தனர்.
2008ம் ஆண்டு காலேயில் நடந்தப் போட்டியில் ஷேவாக் அடித்த இரட்டை சதத்தை யாராலும் மறக்க முடியாது. அந்தப் போட்டியில் கூட அஜந்தா மெண்டிஸின் பந்துவீச்சு இந்திய வீரர்களை திணறடித்தது.
இந்நிலையில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணிக்கு இந்த தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும்.
22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோஹ்லி, இலங்கையில் டெஸ்ட் போட்டிகளில் ஆடியதில்லை. இதுவும் அவருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.
இலங்கை அணியை பொறுத்தவரை அந்த அணியில் சங்கக்காரா மட்டுமே அனுபவ வீரர். மற்றவர்களுக்கு போதிய அனுபவம் இல்லை. இது மட்டுமே இந்திய அணிக்கு சாதகமான விடயம் ஆகும்.
தன்னுடைய முதல் நீண்ட தொடரை வெற்றியுடன் தொடங்க திட்டமிட்டுள்ள விராட் கோஹ்லி, இந்திய அணியின் 22 ஆண்டுகால சோகத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 comments:
Post a Comment