மெட்ராஸ் புகழ் ரஞ்சித் இயக்கத்தில் ஒரு புதிய படம் ரஜினி நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. அதோடு அண்மையில் தான் இப்படத்தில் நாயகியாக நடிக்க ராதிகா ஆப்தே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இன்னொரு பிரபல நடிகையை படக்குழுவினர் தேர்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
வயதான 'டான்' வேடத்தில் நடிக்கவுள்ள ரஜினிக்கு படத்தின் கதைப்படி ஒரு மகள் இருப்பதாகவும், அந்த மகள் வேடத்தில் நடிக்க பிரபல நடிகை ஒருவரை தேர்வு செய்வதில் இயக்குனர் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த வேடம் கொஞ்சம் எமோஷனலான வேடம் என்பதால் விருது பெற்ற சிறந்த நடிகையை ரஞ்சித் தேடிவருகிறாராம்.
0 comments:
Post a Comment