கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட ஸ்ருதி ஹாசன் திடீரென்று விலகியதால் சர்ச்சை எழுந்தது. ஸ்ருதி மீது பட தயாரிப்பாளர் போலீசில் புகார் செய்தார். அவருக்கு பதிலாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஸ்ருதிக்கு ஆதரவாக விஜய்யின் ‘புலி’ பட தயாரிப்பாளர்கள் குரல் கொடுத்தனர். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜீத் நடிக்கும் புதிய படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்திலும் ஸ்ருதி நடிக்கிறார். கடந்த சில வாரமாக தான் நடித்து வரும் புலி மற்றும் தெலுங்கு பட புரமோஷனுக்காக தேதி ஒதுக்கி அதில் பங்கேற்று வருகிறார் ஸ்ருதி. இதனால் அஜீத்துக்கு ஜோடியாக அவர் நடிக்க வேண்டிய சில முக்கிய காட்சிகள் படமாக்கப்படாமல் உள்ளதாம். கொல்கத்தாவில் இதன் படப்பிடிப்பு நடக்கும் நிலையில் ஆந்திரா, சென்னை என ஸ்ருதி தங்கி இருக்க வேண்டி சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மீது அஜீத் பட குழு கோபத்தில் உள்ளதாக கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் இதுபற்றி பட தரப்பில் விசாரித்தபோது, ‘ஸ்ருதி மீது எந்த கோபமும் இல்லை’ என்கிறது பல்லை கடித்தபடி.
0 comments:
Post a Comment