சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் கடந்த சில வாரங்களாக கொல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அங்கு எடுக்கவேண்டிய காட்சிகள் மொத்தத்தையும் எடுத்துவிட்டு படக்குழு மொத்தமும் சென்னை வந்துவிட்டதாம்.
ஒரு வார இடைவெளிக்குப் பின்பு சென்னையில் அடுத்தகட்டப்படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம். சுமார் ஒரு மாதம் வரை நடக்கலாம் என்று சொல்கிறார்கள். அதற்காக ஒரு கல்யாணமண்டபம் செட் உட்பட சில செட்களைத் தயார் செய்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. 

சென்னையில் நடைபெறுகிற படப்பிடிப்போடு மொத்தப்படப்பிடிப்பும் நிறைவு பெற்றுவிடும் என்று சொல்கிறார்கள். இந்தப்படத்துக்கு முதலில் வரம் என்று பெயர் வைக்கலாம் என்று யோசித்தார்களாம். பலருக்கும் அது பிடிக்காததால் அந்தப்பெயரை விட்டுவிட்டு வேறுபெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றனவாம். 

இப்போது பரிசீலனையில் இருக்கும் பெயர்? வெட்டிவிலாஸ். இப்படி ஒரு பெயரா? என்கிற ஆச்சரியம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறார்களாம். சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க!

0 comments:

Post a Comment

 
Top