விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் கிருஷ்ணா இணைந்து நடித்திருக்கும் யட்சன் படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது. அப்போது பேசிய விஷ்ணுவர்தன், இந்தப்படத்தில் ஆரம்பம் படத்தில் பணியாற்றிய குழுவினர் பெரும்பாலும் பணியாற்றியிருக்கின்றனர் என்று சொன்னார்.
விஷ்ணுவர்தன் தம்பியும் படத்தின் இரண்டுநாயகர்களில் ஒருவராகவும் நடித்திருக்கும் கிருஷ்ணா பேசும்போது, என்னை சின்னதல என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், அது ஏனென்றால், என் அண்ணன் விஷ்ணுவர்தன், ஆர்யாவை வைத்துப் படம் எடுத்திருக்கிறார், அடுத்து அஜித்சாரை வைத்துப்படம் இயக்குவார், இருவரையும் சேர்த்து ஆரம்பம் படத்தையும் எடுத்தார். 

இந்தப்படத்தில் அஜித் சார் இல்லை என்பதால் என்னை சின்னதல என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் ஆர்யா. நான் என்ன சொல்லுகிறேனென்றால், அஜித் சார் இடத்தை ஆர்யா பிடித்திருக்கிறார் அவருடைய இடத்தை நான் பிடித்திருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்றார். 

அஜித்திடன் இணைந்து பணியாற்றியவர்கள் அவர் இல்லையென்றாலும் அவரைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று சொல்லப்படுவதற்கு எடுத்துக்காட்டாய் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறதென்கிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Top