நடிகை ஹேமமாலினி தன்னை கார் விபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவருக்கு விருந்து அளித்து கவுரவித்துள்ளார்.
பாஜக எம்பியும் நடிகையுமான ஹேமமாலினியின் கார் கடந்த மாதம் விபத்து ஒன்றில் சிக்கியது.
அந்த விபத்தில் ஹேமமாலினி கார் மோதியதில் குழந்தை ஒன்று உயிரிழந்தது.
விபத்தில் படுகாயம் அடைந்த ஹேமமாலினியை அந்த வழியாக காரில் வந்த சிவ்குமார் சர்மா என்பவர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்.

தற்போது முழுவதும் குணம் அடைந்த நடிகை ஹேமமாலினி தன்னை விபத்தில் இருந்து காப்பாற்றிய மருத்துவரை கவுரவிக்க விரும்பி டாக்டர் சிவ்குமார் சர்மாவை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
அழைப்பை ஏற்று ஜூகுவில் உள்ள நடிகை ஹேமமாலினியின் வீட்டுக்கு சென்ற டாக்டர் சிவ்குமார் சர்மாவிற்கு அறுசுவை விருந்தளித்த ஹேமமாலினி அன்பளிப்புகள் வழங்கி கவுரவித்தார்.

0 comments:

Post a Comment

 
Top