மகேஷ்பாபுவின் செல்வந்தனுக்கு தமிழகத்தில் 105 தியேட்டர்கள்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் தெலுங்கு படமான 'ஸ்ரீமந்துடு' திரைப்படம் தமிழில் 'செல்வந்தன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வரும் 7ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸாகும் அதே தினத்தில் தமிழிலும் வெளியாகவுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தமிழகத்தில் ஸ்ரீமந்துடு தெலுங்கு படம் 60 தியேட்டர்களிலும், செல்வந்தன் 105 தியேட்டர்களிலும் ரிலீஸாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
ஸ்ரீமந்துடு தெலுங்கு படத்தை எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனமும், செல்வந்தன் படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் வெளியிடுகிறது. தமிழின் முன்னனி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா ஆகியோர்களின் படங்கள் தெலுங்கில் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் தெலுங்கு நாயகர்களும் தமிழக மார்க்கெட்டை பிடிக்க தற்போது முயற்சி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரபாஸின் பாகுபலிக்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது மகேஷ்பாபுவின் செல்வந்தன் வெளிவரவுள்ளது.
மேலும் செல்வந்தன் படத்தில் தமிழக ரசிகர்களுக்கு தெரிந்த முகங்களான ஸ்ருதிஹாசன், சுகன்யா, பிரம்மானந்தம், பூர்ணா, தேவிஸ்ரீ ப்ரசாத் போன்றவர்கள் இருப்பதால், இது ஒரு டப்பிங் படம் என்ற ஃபீலிங் இல்லாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த படம் பெறும் வெற்றியை பொருத்து அடுத்தடுத்து தெலுங்கு நாயகர்களின் படங்கள் தமிழில் டப் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment